1. அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடிபரவ
Anggamum vethamum othum naavar anthanar naalum adiparava
Manggul mathi thavaz maada veethi marugal nilaaviya mainthasollaai
Sengayalaar punal selvamalgu seerkol sengkaattag kudiyathanul
Ganggul vilanggeri enthi aadum Ganapathi iicharam kaamurave
2. மங்கையர் கரசி வளவர் கொண் பாவை வரிவளை கை மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாள் தோறும் பரவ
பொங்கழல் ஒருவன் பூத நாயகன்லால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கையர்கன்னி தன்னோடும் அமர்ந்த ஆலவாயாவதும் இதுவே
Manggayar karasi valavar kon paavai vadi valar kai mada maani
Panggayach selvi paandi maa thevi pani seithu naal thorum parava
Pongalal oruvan pootha naayagan aal vethamum porulgalum aruli
Anggayar kanni thannodum amarntha aalavaayaavathum ithuve
3. தோடுடைய செவியன் விடையேறி யோர் தூவெண் மதி சூடி
காடுடைய சுடலை போடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் உன்னைநான் பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் ஏவிய பெம்மான் இவனன்றே
Todudaiya seviyan vidai yerioor thooven mathi soodi
Kaadudaiya sudalai podi poosi en ullaam kavar kalvan
Edudaiya malaraan unai naan paninthetha arul seitha
Peedudaiya piramaapuram eeviya pemmaan ivanandre
4. செம்புபொன் ஆகும் சிவாய நமஎன்னில்
செம்புபொன் ஆகதிரண்டது சிற்பரம்
செம்புபொன் ஆகும் ஸ்ரீயும் கிரியும் என
செம்புபொன் ஆனதிரு சிற்றம்பலமே
Sembhu ponnaagum sivaaya nama ennil
Sembhu ponnaagath thirandathu sitparam
Sembhu ponnaagum shreeyum kireeyum ena
Sembhu ponnaana thiru sitrambalame
5. வேயுறு தோழி பங்கன் விட முண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
Veyuru thozhi panggan vida munda kandan miga nalla veenai thadavi
Maasaru thinggal ganggai mudimel aninthu en ullame puguntha athanaal
Nyaayiru thinggal sevvaai puthan viyaalan velli sani paambirandhum udane
Aasaru nalla nalla avai nalla nalla adiyaar avarku migave
தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

