Thursday, November 11, 2010

தேவாரம்
௧. ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞான கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
௨. குற்றாயினவாறு விலககிலீர் கொடுமை பல செய்தன நானறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றா தென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடகியிட
ஆற்றேன் அடியேன் அதிகை கெடில வீரட்டான துறை அம்மானே
- திருநாவுக்கரசர்
௩. சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாட மறந்தறியேன்
நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன் நாமம் என் நாவில் மறந்தறியேன்
உலந்தார் தலையில் பளிகொண்டுழர்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய் அளந்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டான துறை அம்மானே
௪. சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்த கைதொழ
கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணை ஆவது நமச்சிவாயவே
௫. பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரணம் சாடுதல்
கோவினுக் கருங்கலம் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே
௬. மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே
௭. பொன்னார் மேனியனே புலி தொலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அண்ணே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே
௮. மற்று பற்றென கின்றினின் திரு பாதமே மனம் பாவித்தேன்
பெற்றாலும் பிறந்தேன் இனிபிற வாத தன்மை வந்தேய்திநேன்
கற்றவர் தொழும் த்தேதும் சீர்கரை யுரிட்பாண்டி கொடுமுடி
நற்றவா உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே