Friday, October 29, 2010

பஜன் - கண்ணன் சொன்னதென்ன

கண்ணன் சொன்னதென்ன கீதையிலே - அதை
கருத்தில் கொள்வாய் உந்தன் வாழ்கையிலே (கண்ணன் )x2

அண்ணன் தம்பி சுற்றம் என்பதெல்லாம் உந்தன் - அறிவில்
குழப்பம் தரும் பாசம் என்றான் ......அண்ணன் தம்பி சுற்றம் என்பதெல்லாம்
உந்தன் அறிவில் குழப்பம் தரும் பாசம் என்றான் (கண்ணன்)

அவன் பெயரை சொல்லி கடமையை செய் ....ஆஆ
அவன் பெயரை சொல்லி கடமையை செய் - அதன்
விளைவினை அவனுக்கே அற்பணம் செய் - எவன்
எதை செய்தாலும் அவன் அறிவான் ....ஆ

எவன் எதை செய்தாலும் அவன் அறிவான் - அந்த
எண்ணத்தின் தரம் கண்டு பலன் தருவான் (கண்ணன்-கண்ணன்)

கோவிந்த ராதே ... கோவிந்த ராதே ... கோவிந்த ராதே....ராதே...

Sunday, October 10, 2010

walking through my Life.. as my Shadow..

walking through my Life.. as my Shadow..: "Yesterday is History, Tomorrow is a Mystery & Today is a Gift that is why it’s called 'Present'"

Thursday, September 2, 2010

தேவாரம்

ஓம்
1. அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடிபரவ
மங்குல் மதி தவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கயலார் புனல் செல்வமல்கு சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி ஏந்தி ஆடும் கணபதி ஈச்சரம் காமுறவே


Anggamum vethamum othum naavar anthanar naalum adiparava
Manggul mathi thavaz maada veethi marugal nilaaviya mainthasollaai
Sengayalaar punal selvamalgu seerkol sengkaattag kudiyathanul
Ganggul vilanggeri enthi aadum Ganapathi iicharam kaamurave


2. மங்கையர் கரசி வளவர் கொண் பாவை வரிவளை கை மட மானி

பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாள் தோறும் பரவ

பொங்கழல் ஒருவன் பூத நாயகன்லால் வேதமும் பொருள்களும் அருளி

அங்கையர்கன்னி தன்னோடும் அமர்ந்த ஆலவாயாவதும் இதுவே


Manggayar karasi valavar kon paavai vadi valar kai mada maani
Panggayach selvi paandi maa thevi pani seithu naal thorum parava
Pongalal oruvan pootha naayagan aal vethamum porulgalum aruli
Anggayar kanni thannodum amarntha aalavaayaavathum ithuve


3. தோடுடைய செவியன் விடையேறி யோர் தூவெண் மதி சூடி

காடுடைய சுடலை போடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடுடைய மலரான் உன்னைநான் பணிந்தேத்த அருள் செய்த

பீடுடைய பிரமாபுரம் ஏவிய பெம்மான் இவனன்றே


Todudaiya seviyan vidai yerioor thooven mathi soodi
Kaadudaiya sudalai podi poosi en ullaam kavar kalvan
Edudaiya malaraan unai naan paninthetha arul seitha
Peedudaiya piramaapuram eeviya pemmaan ivanandre

4. செம்புபொன் ஆகும் சிவாய நமஎன்னில்

செம்புபொன் ஆகதிரண்டது சிற்பரம்

செம்புபொன் ஆகும் ஸ்ரீயும் கிரியும் என

செம்புபொன் ஆனதிரு சிற்றம்பலமே


Sembhu ponnaagum sivaaya nama ennil
Sembhu ponnaagath thirandathu sitparam
Sembhu ponnaagum shreeyum kireeyum ena
Sembhu ponnaana thiru sitrambalame


5. வேயுறு தோழி பங்கன் விட முண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே

ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே


Veyuru thozhi panggan vida munda kandan miga nalla veenai thadavi
Maasaru thinggal ganggai mudimel aninthu en ullame puguntha athanaal
Nyaayiru thinggal sevvaai puthan viyaalan velli sani paambirandhum udane
Aasaru nalla nalla avai nalla nalla adiyaar avarku migave

தென்னாடுடைய சிவனே போற்றி

என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

Tuesday, August 17, 2010

தென்னாடுடைய சிவனே போற்றி - என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
தேவார திருமுறை / பஜன் பயிற்சி வகுப்பு

அன்புடையீர் metkurippitta
படி வகுப்பு நமது ஆலயத்தில் நடை பெரும். தவறாமல்
கலந்து பயன் பெற வேண்டுகிறோம்.
இடம்: இரவாங் கோலா காரிங் கருமாரியம்மன் ஆலயம்
நாள்: 5-09-2010 (பிறகு ஒவ்வொரு ஞாயிறும்)
நேரம்: 10 A.M - 11.15 A.M
கட்டணம்: மாணவர் ஒருவருக்கு தலா RM15/=
மேல் விவரத்திற்கு 012-6281725 தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு: மாணவர்கள் மலேசியா இந்து சங்கம் ஆண்டு தோறும் நடத்தி வரும்

திருமுறை போட்டி விழாவில் கலந்து கொள்ள தங்களை தயார் படுத்தும் முறையில் அமையும்.


THEVARAM/THIRUMURAI & BHAJAN CLASS
Dear Devotees,
The above mentioned class will be conducted as below. All kindly invited to participate and benefit.


PLACE: RAWANG-KUALA GARING KARU MARIAMMAN TEMPLE
DATE: 05-09-2010 and EVERY SUNDAY THEREAFTER
TIME: 10.00 AM - 11.15 AM
FEE : RM15/= PER STUDENT
Please contact 012-6281725 for further details, if any....

NOTE: STUDENTS WILL BE GUIDED TO PARTICIPATE IN MALAYSIA HINDU SANGAM'S ANNUAL THIRUMURAI CONTEST

Tuesday, July 13, 2010

நண்பர்களே
காலை வணக்கம். நலம் . நலம் அறிய அவா
இன்றைய பொழுது நல்ல பொழுதாக என் இனிய வாழ்த்துக்கள் . நாளை மீண்டும் சந்திப்போம். நன்றி. வணக்கம் .

Thursday, June 17, 2010

அன்பர்களே நண்பர்களே
என்ன சுகம் தானே? ஆண்டவன் கிருபையால் நலமுடனே வளமுடனே இருப்பீர்கள் என நன்புகிறேன் !

முதலில் கொஞ்ச நாளாய் இந்த என் ப்ளாக் பக்கம் தலை வைக்காமல் இருந்து விட்டேன்! அதற்கு சாக்கு போக்கு ஏதும் சொல்லாமல் மரியாதையாய் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்!

அப்புறம் என்ன கதைன்னு கேக்கறீங்கள? எல்லாம் நல்ல கதை தான்!
மிக விரைவில் அந்த நல்ல கதையுடன் வருகிறேன்!

அதுவரை, நலமாக வளமாக வாழ வாழ்த்துகிறேன்! :-)
:-)