Thursday, December 30, 2010

ஆங்கில புத்தாண்டு நல வாழ்துக்கள்

நண்பர்கள் அன்பர்கள் யாவருக்கும் அடியேனின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இன்பமே சூழ்க. எல்லோரும் வாழ்க
http://www.g1g4lite.net (guest code 38838)

Tuesday, December 21, 2010

சுலபமான வழியில் தொடர்ந்து பணம் பண்ணுவோம்

நண்பர்களே வணக்கம்.
பணம் பண்ண சுலபமான வழி. முறையான வழி. முக்கியமாக தவறற்ற வழி.
www.youtube.com சென்று
G1G4 gifting என்று டைப் செய்யுங்கள். விளக்க படம் இருக்கும். பாருங்கள். மீண்டும் ஒரு முறை பாருங்கள். பிடித்திருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
6012 6281725 Malaysia or mail me at ragu_mm@hotmail.com my code is 38838
ஒரே ஒரு முறை usd60 முதலீட்டில் - ஆறே மாதத்தில் - மாதம் ஒன்றுக்கு usd 11,000 வரை சம்பாதிக்க வாய்ப்பு உள்ள திட்டம்.

தவறாமல் சென்று காணுங்கள். டீம் வொர்க் மூலம் முன்னேறுவோம் வாருங்கள்.
என் நன்றியும் வாழ்த்துக்களும்.





படித்ததில் பிடித்தது / குறியும் இழக்கும்

குறியும் இலக்கும்

கடாரத் தமிழ்ப் போரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி

பழைய ஸென் கதை ondru உண்டு.
'பழைய' ஸென் என்று சொல்கிறேனே. காரணம் உண்டு. ஸென் கதைகளில் பலவற்றை இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் எழுதியிருக்கிறார்கள்.
இப்போது Zen என்பது கதை இலக்கியத்தில் ஒரு genre-ஆக ஆகிவிட்டிருக்கிறது.

பழைய ஸென் என்பது ஏற்கனவே உள்ள கதை.

ஷாஓலின் என்ற Martial Arts மரபைப் பற்றி கள்விப்பட்டிருப்பீர்கள்.
அகத்தியத்தில் பலமுறை எழுதப்பட்ட ஒன்று.

புத்தபிக்குகளால் வளர்க்கப்பட்ட போர்முறை ஒன்று அந்த மடத்தைச்
சேர்ந்தவர் களிடம் உண்டு.


அந்த மரபைச் சேர்ந்த மஹாகுரு ஒருவர் இருந்தார். அவருக்குப் பல சீடர்கள். வில்வித்தை, ஈட்டி எறிதல், மற்போர் போன்ற பலவற்றிலும் கைதேர்ந்தவர்.

இன்னொரு நாட்டைச்சேர்ந்த வில்லி ஒருவன் அவரிடம் வந்தான். ஏதாவது நாடகத்தில் அல்லது படத்தில் வரும் கதாபாத்திரம் என்று நினைத்துவிடவேண்டாம். வில்வீரனுக்குப் பழைய பெயர் 'வில்லி'. ராமனை
'சுந்தரவில்லி' என்று, லட்சுமணனை 'உறங்காவில்லி' என்றும் குறிப்பிடுவார்கள்.

அவரிடம் தன்னுடைய வில்வித்தைத் தேர்ச்சியைக் காட்டினான். ஒரு மரத்தைக் குறி வைத்து அம்பெய்தான். அதன் பின், இன்னொரு அம்பை எய்தான். அது முதல் அம்பைப் பிளந்துகொண்டு அதே இலக்கில் பாய்ந்தது.

"இது போல் உம்மால் அம்பெய்ய முடியுமா? - எகத்தாளம், இறுமாப்பு, கர்வத்துடன் கேட்டான்.

மஹாகுரு ஒன்றும் சொல்லவில்லை.

தம்முடன் வருமாறு கைச்சைகையைக் காட்டிவிட்டு விடுவிடென்று எங்கோ சென்றார். காட்டுக்குள் நுழைந்து ஒரு மலையின் மீது ஏறிச் சென்றார்.

அந்த மலையின்மீது ஒரு பெரிய பிளவு இருந்தது. அந்தப் பிளவு பலநூறு அடிகள் ஆழம் கொண்டது. அதன்மீது ஒரு மரத்தை வெட்டி குறுக்கே போட்டிருந்தார்கள். அதன்மீது நடந்துதான் அந்தப் பிளவைக் கடக்கமுடியும். அதுவோ கனம் அதிகம் இல்லாதது. கோணல்மாணலாகவும் இருந்தது. காலை வைத்தாலேயே கடகடவென்று ஆடியது. கொஞ்சம் புரண்டாலும் கிடுகிடு பள்ளத்தில் விழுந்துவிட நேரிடும்.

மஹாகுரு வில் அம்பை வில்லியிடமிருந்து வாங்கிக்கொண்டார்.

மஹாகுரு அந்தமரத்தின்மீது கால்வைத்து நடந்தார். அதன் நடுப்பகுதிக்குச்
சென்றார்.


அங்கு நின்றுகொண்டு வில்லை எடுத்து அம்பைப்பூட்டினார். மறு பக்கத்தில் தூரத்தில் தெரிந்ததொரு மரத்தைக் குறிவைத்து அம்பை எய்தார்.

அது சற்றும் பிசகாமல் அந்த மரத்தின்மீது தைத்து நின்றது.

குறுக்குப்பாலத்திலிருந்து திரும்பிய மஹாகுரு, வில்லையும் அம்பையும் திருப்பி வில்லியிடம் கொடுத்துவிட்டுச் சொன்னார்.

"இப்போது நீ அந்தப் மரத்தின்மீது நின்றுகொண்டு அதே மரத்தைக் குறிபார்த்து அம்பை எய், பார்க்கலாம்", என்றார்.

அந்தப் பள்ளத்தைப் பார்த்ததுமே வில்லிக்கு நடுக்கம். அதுவும் அந்த மரத்தின் மீது ஏறுவதாவது.

இருப்பினும் ஏறிச்சென்றான். மரம் ஆடியது. கொஞ்சதூரம் போனதுமே கீழே பார்த்தான்.

வில்லிக்குத் தலை சுற்றியது; உடலெல்லாம் நடுங்கியது; வியர்த்து விறுவிறுத்துப் போனான். நாவெல்லாம் உலர்ந்து போயிற்று. ரல்கொடுக்கக்கூட அவனால் முடியவில்லை. நடுக்கத்தில் டக்கென்று கால் நழுவியது.
அப்படியே படுத்துக்கொண்டு அந்த மரத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டான்.

மஹாகுரு மரத்தின்மீது ஏறிச்சென்றார்.
அந்த வில்லியை அப்படியே தூக்கினார்.
திரும்பிவந்தார்.

அவனை இறக்கிவிட்டுவிட்டு சொன்னார்.

"உன்னுடைய திறமையெல்லாம் உன்னுடைய வில்லுடன்தான் இருக்கிறது. அதை
நீ ஆள்கிறாய். ஆனால் அதை எய்வதற்குக் காரணமாக இருக்கும் உன்னுடைய மனது உன்னுடைய கட்டுப்பாட்டிலும் ஆளுமையிலும்
இல்லை.

குறியும் இலக்கும் உன் மனதில்தான் பிறக்கின்றன.

அதை முதலில் கட்டுப்படுத்து."

படித்ததில் பிடித்தது / சும்மா இரு

சும்மா இருக்க தம்மால் முடியவில்லை; ஆகவே தெய்வத்தின் துணையை நாடுகிறார் தாயுமானவர்.

"சொல்லால் முழக்கிலோ சுகம் இல்லை; மெளனியாய்ச்

சும்மா இருக்க அருளாய்!
சுத்தநிர்க்குணமான பரதெய்வமே பரம்
ஜோதியே சுகவா¡¢யே!"

சும்மா இருப்பது எவ்வளவு கடினம் தொ¢யுமா?
அதனையும் தாயுமானவரே பட்டியல் போட்டுத்தருகிறார், பாருங்கள்.

"கந்து உக மதக்கா¢யை வசமா நடத்தலாம்;
கரடி,வெம்புலி வாயையும்
கட்டலாம்; ஒரு சிங்கம் முதுகின்மேல் கொள்ளலாம்;
கட்செவி எடுத்து ஆட்டலாம்;
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்துலோகத்தையும்
வேதித்து விற்று உண்ணலாம்;
வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;
சந்ததமும் இளமையோடு இருக்கலாம்; மற்று ஒரு
சா£ரத்திலும் புகுதலாம்;
ஜலம்மேல் நடக்கலாம்; கனல்மேல் இருக்கலாம்;
தன்னிகா¢ல் சித்தி பெறலாம்;
சிந்தையை அடக்கியே "சும்மா" இருக்கின்ற
திறம் அ¡¢து! சத்து ஆகி என்
சித்தமிசை குடி கொண்ட அறிவு ஆன தெய்வமே!
தேஜோ மய ஆனந்தமே!

- தாயுமானவர்

மதயானையை அடக்கிவிடலாம்; கரடி, புலி வாயைக்கட்டலாம்; சிங்கத்தின் மீது சவா¡¢ செய்யலாம்; பாம்பை எடுத்து ஆட்டலாம்; இரசவாதம் என்னும் வித்தையால் உலோகங்களைப் பொன்னாக மாற்றி வாழ்க்கை நடத்தலாம்; மாயமாக மறைந்து புலனாகாமல் தி¡¢யலாம்; தேவர்களையும் அடிமைப்படுத்தலாம்; காயகல்பம் செய்து இளமையோடு இருக்கலாம்; கூடுவிட்டுக்கூடு பாய்ந்து வேறொரு உடலுக்குள் புகுந்து கொள்ளலாம்; ஜலஸ்தம்பனம் செய்து நீர்மேல் நடக்கலாம்; அக்கினி ஸ்தம்பனவித்தை புகுந்து நெருப்பின்மேல் இருக்கலாம்; ஒப்பில்லாத சித்திகள் பெற்றுவிடலாம்.

ஆனால், சிந்தையை அடக்கி சும்மா இருப்பது இருக்கிறதே!

அப்பப்பா! அது நம்மால் ஆகாதப்பா!

ஆளை விடு.

Thursday, November 11, 2010

தேவாரம்
௧. ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞான கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
௨. குற்றாயினவாறு விலககிலீர் கொடுமை பல செய்தன நானறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றா தென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடகியிட
ஆற்றேன் அடியேன் அதிகை கெடில வீரட்டான துறை அம்மானே
- திருநாவுக்கரசர்
௩. சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாட மறந்தறியேன்
நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன் நாமம் என் நாவில் மறந்தறியேன்
உலந்தார் தலையில் பளிகொண்டுழர்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய் அளந்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டான துறை அம்மானே
௪. சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்த கைதொழ
கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணை ஆவது நமச்சிவாயவே
௫. பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரணம் சாடுதல்
கோவினுக் கருங்கலம் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே
௬. மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே
௭. பொன்னார் மேனியனே புலி தொலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அண்ணே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே
௮. மற்று பற்றென கின்றினின் திரு பாதமே மனம் பாவித்தேன்
பெற்றாலும் பிறந்தேன் இனிபிற வாத தன்மை வந்தேய்திநேன்
கற்றவர் தொழும் த்தேதும் சீர்கரை யுரிட்பாண்டி கொடுமுடி
நற்றவா உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே

Friday, October 29, 2010

பஜன் - கண்ணன் சொன்னதென்ன

கண்ணன் சொன்னதென்ன கீதையிலே - அதை
கருத்தில் கொள்வாய் உந்தன் வாழ்கையிலே (கண்ணன் )x2

அண்ணன் தம்பி சுற்றம் என்பதெல்லாம் உந்தன் - அறிவில்
குழப்பம் தரும் பாசம் என்றான் ......அண்ணன் தம்பி சுற்றம் என்பதெல்லாம்
உந்தன் அறிவில் குழப்பம் தரும் பாசம் என்றான் (கண்ணன்)

அவன் பெயரை சொல்லி கடமையை செய் ....ஆஆ
அவன் பெயரை சொல்லி கடமையை செய் - அதன்
விளைவினை அவனுக்கே அற்பணம் செய் - எவன்
எதை செய்தாலும் அவன் அறிவான் ....ஆ

எவன் எதை செய்தாலும் அவன் அறிவான் - அந்த
எண்ணத்தின் தரம் கண்டு பலன் தருவான் (கண்ணன்-கண்ணன்)

கோவிந்த ராதே ... கோவிந்த ராதே ... கோவிந்த ராதே....ராதே...

Sunday, October 10, 2010

walking through my Life.. as my Shadow..

walking through my Life.. as my Shadow..: "Yesterday is History, Tomorrow is a Mystery & Today is a Gift that is why it’s called 'Present'"

Thursday, September 2, 2010

தேவாரம்

ஓம்
1. அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடிபரவ
மங்குல் மதி தவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கயலார் புனல் செல்வமல்கு சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி ஏந்தி ஆடும் கணபதி ஈச்சரம் காமுறவே


Anggamum vethamum othum naavar anthanar naalum adiparava
Manggul mathi thavaz maada veethi marugal nilaaviya mainthasollaai
Sengayalaar punal selvamalgu seerkol sengkaattag kudiyathanul
Ganggul vilanggeri enthi aadum Ganapathi iicharam kaamurave


2. மங்கையர் கரசி வளவர் கொண் பாவை வரிவளை கை மட மானி

பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாள் தோறும் பரவ

பொங்கழல் ஒருவன் பூத நாயகன்லால் வேதமும் பொருள்களும் அருளி

அங்கையர்கன்னி தன்னோடும் அமர்ந்த ஆலவாயாவதும் இதுவே


Manggayar karasi valavar kon paavai vadi valar kai mada maani
Panggayach selvi paandi maa thevi pani seithu naal thorum parava
Pongalal oruvan pootha naayagan aal vethamum porulgalum aruli
Anggayar kanni thannodum amarntha aalavaayaavathum ithuve


3. தோடுடைய செவியன் விடையேறி யோர் தூவெண் மதி சூடி

காடுடைய சுடலை போடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடுடைய மலரான் உன்னைநான் பணிந்தேத்த அருள் செய்த

பீடுடைய பிரமாபுரம் ஏவிய பெம்மான் இவனன்றே


Todudaiya seviyan vidai yerioor thooven mathi soodi
Kaadudaiya sudalai podi poosi en ullaam kavar kalvan
Edudaiya malaraan unai naan paninthetha arul seitha
Peedudaiya piramaapuram eeviya pemmaan ivanandre

4. செம்புபொன் ஆகும் சிவாய நமஎன்னில்

செம்புபொன் ஆகதிரண்டது சிற்பரம்

செம்புபொன் ஆகும் ஸ்ரீயும் கிரியும் என

செம்புபொன் ஆனதிரு சிற்றம்பலமே


Sembhu ponnaagum sivaaya nama ennil
Sembhu ponnaagath thirandathu sitparam
Sembhu ponnaagum shreeyum kireeyum ena
Sembhu ponnaana thiru sitrambalame


5. வேயுறு தோழி பங்கன் விட முண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே

ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே


Veyuru thozhi panggan vida munda kandan miga nalla veenai thadavi
Maasaru thinggal ganggai mudimel aninthu en ullame puguntha athanaal
Nyaayiru thinggal sevvaai puthan viyaalan velli sani paambirandhum udane
Aasaru nalla nalla avai nalla nalla adiyaar avarku migave

தென்னாடுடைய சிவனே போற்றி

என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

Tuesday, August 17, 2010

தென்னாடுடைய சிவனே போற்றி - என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
தேவார திருமுறை / பஜன் பயிற்சி வகுப்பு

அன்புடையீர் metkurippitta
படி வகுப்பு நமது ஆலயத்தில் நடை பெரும். தவறாமல்
கலந்து பயன் பெற வேண்டுகிறோம்.
இடம்: இரவாங் கோலா காரிங் கருமாரியம்மன் ஆலயம்
நாள்: 5-09-2010 (பிறகு ஒவ்வொரு ஞாயிறும்)
நேரம்: 10 A.M - 11.15 A.M
கட்டணம்: மாணவர் ஒருவருக்கு தலா RM15/=
மேல் விவரத்திற்கு 012-6281725 தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு: மாணவர்கள் மலேசியா இந்து சங்கம் ஆண்டு தோறும் நடத்தி வரும்

திருமுறை போட்டி விழாவில் கலந்து கொள்ள தங்களை தயார் படுத்தும் முறையில் அமையும்.


THEVARAM/THIRUMURAI & BHAJAN CLASS
Dear Devotees,
The above mentioned class will be conducted as below. All kindly invited to participate and benefit.


PLACE: RAWANG-KUALA GARING KARU MARIAMMAN TEMPLE
DATE: 05-09-2010 and EVERY SUNDAY THEREAFTER
TIME: 10.00 AM - 11.15 AM
FEE : RM15/= PER STUDENT
Please contact 012-6281725 for further details, if any....

NOTE: STUDENTS WILL BE GUIDED TO PARTICIPATE IN MALAYSIA HINDU SANGAM'S ANNUAL THIRUMURAI CONTEST

Tuesday, July 13, 2010

நண்பர்களே
காலை வணக்கம். நலம் . நலம் அறிய அவா
இன்றைய பொழுது நல்ல பொழுதாக என் இனிய வாழ்த்துக்கள் . நாளை மீண்டும் சந்திப்போம். நன்றி. வணக்கம் .

Thursday, June 17, 2010

அன்பர்களே நண்பர்களே
என்ன சுகம் தானே? ஆண்டவன் கிருபையால் நலமுடனே வளமுடனே இருப்பீர்கள் என நன்புகிறேன் !

முதலில் கொஞ்ச நாளாய் இந்த என் ப்ளாக் பக்கம் தலை வைக்காமல் இருந்து விட்டேன்! அதற்கு சாக்கு போக்கு ஏதும் சொல்லாமல் மரியாதையாய் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்!

அப்புறம் என்ன கதைன்னு கேக்கறீங்கள? எல்லாம் நல்ல கதை தான்!
மிக விரைவில் அந்த நல்ல கதையுடன் வருகிறேன்!

அதுவரை, நலமாக வளமாக வாழ வாழ்த்துகிறேன்! :-)
:-)