Wednesday, February 23, 2011

தேவார பஜன் நன்னெறி பாடல் பயிற்சி

ரவாங், செலயங் வட்டார அன்பர்களுக்கு அடியேனின் இனிய வேண்டுகோள் :-
ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் காலை மணி ஒன்பதரை முதல் பதினொன்று வரை ரவாங் கோலா காரிங் கருமாரியம்மன் ஆலயத்திலும் ...

பதினொன்றரை முதல் பிற்பகல் ஒன்று வரை ரவாங் சுங்கை டேறேண்டங் (மசாலாம்) கரு மாரியம்மன் ஆலயத்திலும் மேல் கூறப்பட்ட பயிற்சி சொல்லிகொடுக்க படுகிறது.

நான்கு வயது முதல் எழுபது வயது வரை உள்ள ஆண் /பெண் அனைவரும் வந்து கலந்து பயன் பெற அழைக்க படுகின்றனர். மேல் தொடர்புக்கு:-
012-6281725 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். நன்றி

அள்ளி அள்ளி கொடுத்த போதும் ....../நன்னெறி பாடல்

அள்ளி அள்ளி கொடுத்த போதும் குறைவில்லாதது ......
கள்ளருக்கும் காவலர்க்கும் இனிமையானது ......
உள்ளம் என்பதுள்ளவர்க்கு உண்மையானது .....
உலகம் என்பதுள்ளவரை உறுதியானது .....

அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது

மதத்தின் மீது வைத்த அன்பு பக்தி ஆனது
மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது
இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது (அன்பு என்பதே )

அறிவில்லாத மனிதர் உள்ளம் அருள்ளிலாதது
அருள்ளில்லாத மனிதர் உள்ளம் பணிவில்லாதது
பணிவில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாதது
பண்பில்லாத மனிதர் உள்ளம் அன்பில்லாதது (அன்பு என்பதே )

பொன் படைத்த மனிதர் கோடி நகைகள் வாங்கலாம்
பூமி வீடு காடு மேடு கரைகள் வாங்கலாம்
அன்பு என்னும் பொருளை எந்த உலகில் வாங்கலாம் ?
நல்ல அன்னை தந்தை பிள்ளை வாழும் மனையில் வாங்கலாம் (அன்பு என்பதே)

தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? படித்ததில் பிடித்தது

அம்மா என்று அழைக்கத் தொடங்கியவனை
MUMMY என்று திருத்தம் செய்தபோது இருந்த மகிழ்ச்சி ;


" உயிரெழுத்துனா என்னமா ? " என்றவனிடம்
" ENGLISH ல VOWELS இருக்குல்லப்பா அது மாதிரி
உயிரெழுத்துனா தமிழ் VOWELS " என்றபோதிருந்த பெருமை ;


அடுத்த வீட்டுப் பையன் " அம்மா இங்கே வாவா ,
ஆசை முத்தம் தா தா " என்றும் பாடும் பொழுது ,
தன்வீட்டுப் பையன் " RAIN RAIN GO AWAY " என்றுபாடிய
போது வந்த சந்தோசம் ;


எதற்கேனும் எப்பொழுதேனும் மேற்கோள் காட்ட
WORDSWORTH யும் SHAKESPHERE யும்
சொல்லும்போது கிடைக்கும் பேரானந்தம் ;


மம்மி என் பேருக்கு டமில்ல TWO சுழி நா வருமா ?
இல்ல THREE சுழி நா வருமா ? என்று கேட்கும்
மகனைப் பார்க்கும்போது வரும் புன்சிரிப்பு ;


பையன் என்ன டிவி பாக்குறான் என்று
வேறு கேள்வி இல்லாமல் எதேட்சயாகக் கேட்போரிடம்
" HE LIKES ONLY ENGLISH CHANNELS & HOLLYWOOD MOVIES "
என்று பதில் சொல்லும்போது உள்ள பெருமிதம் ;


இதுவரை ஆங்கில மோகத்தில் மகிழ்ச்சியுற்ற மனம்
ஏனோ விரும்புகிறது தமிழ்க் கலாச்சாரத்தை
நீங்கள் முதியோர் இல்லம் சென்றுவிடுங்கள் என்னும் மகனைப் பார்க்கும்பொழுது!!!


HOW ARE YOU என்ற பதத்தினை ஹவ் ஆர் யூ என்று எழுதி
மனப்பாடம் செய்த காலம் போய் இப்பொழுது எப்படி இருக்க
என்னும் பதத்தினை EPPADI IRUKKA என்று எழுதி மனப்பாடம்
செய்யும் காலத்திற்கு முன்னேறிக்கொண்டிருக்கிறோம்!!
தமிழ் இனி மெல்லச்சாகுமோ ?


பின்குறிப்பு : இங்கிலீஸ் படிக்கவே வேண்டாம்னு சொல்ல வரலைங்க , கண்டிப்பா அது படிச்சே ஆக வேண்டிய ஒண்ணு . ஆனா அத பயன்படுத்த வேண்டிய இடத்துல மட்டும் பயன்படுத்தினா நல்லதுன்னு நினைக்கிறேன்!!

Monday, February 14, 2011

தென்னாடுடைய சிவனே என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
தேவாரம் பஜன் நன்னெறி பாடல் பயிற்சி வகுப்பு
அன்புடையீர்,
மேற்குறிப்பிட்ட பயிற்சி வகுப்பு நமது ஆலயத்தில் கீழ் கண்ட
விவரப்படி நடைபெற ஆயத்தம் செய்ய பட்டுள்ளது. நான்கு வயது முதல் எழுபது வயது வரை உள்ள அணைத்து ஆண்/பெண் அனைவரும் கலந்து
பயன் பெறுமாறு அழைக்க படுகின்றனர்.

இடம்: கம்போங் சுங்கை தேரேந்தங் கருமாரியம்மன் ஆலயம்
நாள்: ஞாயிறு 20-02-2011 அதன் பிறகு ஒவ்வொரு ஞாயிறும்
நேரம்: 11.30 a.m - 1.00 p.m
கட்டணம்: RM 15.00

குறிப்பு: மாணவர்கள் மலேசியா இந்து சங்கம் நடத்தும் வருடாந்திர திருமுறை போட்டியில் பங்கு கொள்ள ஆயத்த படுத்த படுவர். 012-6281725







Tuesday, February 8, 2011

மஹா மிருதுன்ஜய மந்திரம்

ஓம் இத்ரயம்பகம் யஜா மஹே
ஷுகந்தீம் புஷ்டி வர்த்தனம்
உர்ர்வாருகவிவ பந்தனான்
ம்ருத்யோர் முஷீய மாம்ருதாத் .

பொருள்: நறுமணம் மிகுந்தவரும் எல்லா ஜீவன்களுக்கும் புஷ்டி அளிப்பவரும் முக்கண்ணனுமான சிவா பெருமானை புஜிக்கின்றோம். வெள்ளரி தன் கொடியினின்றும் விடுவிக்க படுவது போல் அமரத்துவத்தின் பொருட்டு அன்னவன் நம்மை மரணத்தினின்றும் விடுவிப்பாராக.

நன்மைகள்: இந்த மஹா மிருதுன்ஜய மந்திரம் ஓர் உயிர் வழங்கும் மந்திரம். இந்நாட்களில் நம் உயிரிகுப் பல வழிகளில் எதிர் பாராத நிலையில் இன்னல்கள் ஏற்படுகின்றன. இம்மந்திரம் எல்லா வித விபத்துகளினாலும் மரணம் ஏற்படுவதை தவிர்கிறது. மேலும் இதற்கு நோய் நிவர்த்திக்கும் சக்தியுண்டு. தவிரவும் உண்மையோடும் நம்பிக்கையோடும் உச்சரித்தால் மருத்துவ வல்லுனர்களால் தீராது என்று கைவிடப்பட்ட பிணிகளும் போக்கப்படுகின்றன. இம்மந்திரம் வியாதிகளை நீக்கும் ஆயுதம். மரணத்தை வெல்லும் மந்திரம்.



MAHA MRITYNJAYA MANTRA

Om tryambagam yajamahe
Sugandhim pushtivardhanam
Uruvaarukamiva bandhanaat (u-)
Mrityormuksheeya maaritat

சமரச பிரார்த்தனை

கருணையும் அன்பும் நிறைந்த இறைவ! எல்லா உயிர்களிலும் ஊடுருவி எங்கும் நிறைந்து சர்வ வல்லமையும் பொருந்திய சர்வக்ஞ்யனான சச்சிதானந்த பரம்பொருளாம் உம்மை வணங்கிப் பணிகின்றோம். மெய்ப்பொருள் காணும் உள்ளம், சமநோக்கு, நிலைபெற்ற மனம், சிரத்தை, பக்தி, ஞானம் இவைகளை எங்களுக்கு அருள்வீராக. ஆணவம், காமம், பேராசை, கோபம், வெறுப்பு இவைகளிலிருந்து எங்களை விடுவித்து, எங்கள் உள்ளங்களில் தூய தெய்வீக குணங்களை நிரபூவீராக. எல்லா உருவங்களிலும் பெயர்களிலும் உம்மையே தரிசித்து சேவை செய்வோமாக. எந்நேரமும் உம்மையே சிந்திப்போமாக. என்தேன்றும் உமது புலழை பாடுவோமாக. எப்போதும் எங்களது நாவினில் உமது திருநாமம் விளங்குக. என்டேன்றும் உம்முள்ளே நிலைபெற்று விளங்குவோமாக. ஓம் தத்சத்.


UNIVERSAL PRAYER

Karunaiyum ambum niraintha iraiva! Ella uyigalilum ooduruvi enggum nirainthu sarva vallamaiyum porunthiya sarvaknyanaana sachithaanantha param porulaam ummai vananggi panigindrom. Meiporul kaanum ullam, samanokku, nilaipetra manam, sirathai, bakthi, nyaanam ivaigalai enggalukku arulveeraaga. Aanavam, kaamam, peraasai, kobam, veruppu ivaigalilirunthu enggalai viduvithu, enggal ullanggalil thooya theiveega gunanggalai nirappuveeraaga. Ella uruvanggalilum peyargalilum ummaiye tharisithu sevai seivomaaga. Enneramum ummaiye sinthippomaaga. Endendrum umathu pugalai paaduvomaaga. Eppothum enggalathu naavinil umathu thirunaamam vilangguga. Endendrum ummulle nilaipetru vilanguvomaaga. Aum Tatsath.