Thursday, June 30, 2011

படித்ததில் பிடித்து - முயற்சியில் உயர்ச்சி

முயற்சியின் உயர்ச்சி.





முயற்சி என்கிற கிரியா ஊக்கியைப் பற்றி அறிந்திருக்கிறோமா?எல்லா நல்ல குணங்களும் சிறந்த கொள்கைகளும் முறையான படிப்பறிவு நல்ல சூழல் எல்லாம் அமைந்திருந்தாலும் முயற்சி இல்லாவிட்டால் வாழ்வில் பயன் ஏதுமே இல்லை.

கொஞ்சம் முயற்சி செய்யும் குணத்தை வளர்த்துக் கொண்டால் நல்லது.இழந்தவைகள் இனிக் கிடைக்கப்போவதில்லை.நினைக்கும்போது வேதனையாக இருந்தாலும் புலம்பிக்கொண்டிருக்காமல் (என்னைப்போல) அடுத்த வழி தெரியும் திசையில் நடக்க வேண்டிய ஆயத்தங்களில் ஈடுபடுவதே பெருமையையும் வெற்றியையும் தரும்.

எங்களின் மன உறுதியும் முயற்சியின் அளவைப் பொறுத்தே எம் வாழ்வின் வளர்ச்சியும்.

முயற்சி தேவைதான்.அதே சமயத்தில் தன் பலம் மற்றும் அடுத்தவர் பலம் உணர்ந்தே செயற்படுதல் அவசியமாயிருக்கிறது.எங்களின் சக்திக்கு மீறிய செயற்பாடுகள் தரையில் தன் பலத்தை முயற்சித்துப் பார்க்கும் முதலையைப் போன்றது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

முயற்சியின் முழுப்பலனையும் பெறவிரும்பினால் சோம்பலை அறவே ஒழித்துக் கட்டுதல் முக்க்கியம்.(இந்த இடத்தில 3,4 பேர் என்னைக் கலாய்க்க ஓடி வருவினம்.)

முழு முயற்சியுடன் செயல்படும் வழக்கத்தைப் பழகிக்கொண்டால் சோர்வு,ஞாபகமறதி எம்மை விட்டுத் தூரவே போய்விடும்.

சரியான பயிற்சியுடனான முழுமையான முயற்சிக்கு மற்றவர்களின் எந்தச் சூழ்ச்சியும் தடை ஏற்படுத்தமுடியாது.

விதி,நேரகாலம்,அதிக்ஷ்டம்,பயம் என்று புலம்புவதில்லை என்று மனதில் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.இப்பிடித்தான் நான்.மனத்தளர்ச்சி இல்லாத முயற்சி விதியையே மாற்றியமைக்கும்ன் சக்தி கொண்டது.சில காலங்கள் தாமதமாகலாமே தவிர நல்லதே நடக்கும்.சத்தியமா நான் சொன்னதெல்லாம் உண்மை.

துயரங்கள் சோர்ந்து போகவேண்டாம்.விடையில்லாத வினாவோ தீர்வேயில்லாத பிரச்ச்னையோ இல்லை.விடைக்கான தீர்வுக்கான முயற்சியை அதிகப்படுத்த துயரங்கள் கைகாட்டி மறைந்துகொண்டேயிருக்கும்.

ஒரு காரியத்திற்காக முயற்சி செய்யும்போது இடையூறுகளால் மனம் தளர்வடையாமல் உறுதி கொண்ட மனம் கொண்டவராய் இருத்தல் அவசியம்.

அனுபவ அறிவு இல்லாத செயல்களில் ஈடுபடும்போது அதைப்பற்றித் தெரிந்தவர்களிடம் கலந்து ஆலோசித்து செயல்படுவது மிக மிக முக்கியம்.(இதில் நான் நிறையவே அடிபட்டிருக்கிறேன்.)அப்போதான் நிலையான வெற்றி கிடைக்கும்.

ஒரே நேரத்தில் பல காரியங்களில் கை வைக்காமல் ஒரு செயலில் மாத்திரமே முழுமையாக முயற்சிப்பதால் காலம் தாழ்த்தாமல் வெற்றி கிடைக்கும்.

எத்தனை காலம் சிறப்பாகத் திட்டம் போட்டாலும் அதற்கான செயற்பாட்டின்போது தளராத முயற்சியே சிறப்படைய வைக்கும்.

தளராத முயற்சி எனும் அஸ்திவாரத்தின் மேல் தொடங்கும் நமது வாழ்க்கை பாறை மேல கட்டிய வீட்டைப்போல உறுதியாய் அழகாய் மிளிரும்.(கல்லுப் பாறைக்கு மேல வீடெல்லாம் கட்டேலுமோ எண்டு கேக்கப்படாது...சொல்லிப்போட்டன் )

முயற்சிதான் வாழ்வதின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. தன்னைத் தானே உணர்ந்து கொள்வதற்கு வழி செய்கிறது. நாம் செய்யும் எல்லா முயற்சிகளிலும் நம்மை நாமே புரிந்து கொள்வது மகத்தானது.நம்மை நாம் புரிந்து கொள்ளாதவரையில் நமக்குள் மறைந்து கிடக்கும் மாபெரும் சக்திகளினால் பயன் எதுவும் ஏற்படாது. பிறப்பு இயற்கையானது போலவே முயற்சியும் நம்முடனேயே இருந்து கொண்டிருக்கிறது.

என் அனுபவம் இவைகள்.எத்தனையோ இடங்களில் மனம் தளர்ந்திருந்தாலும் என் முயற்சியே என்னை ஓரளவு பாதுகாத்து உயர்த்தி வைத்திருக்கிறது.எனக்கு நானே எத்தனயோ தரம் தட்டிக் கொடுத்துச் சந்தோஷப்பட்டிருக்கிறேன்.
எனக்கு....என் துணிச்சலுக்கு நன்றி....!

ஒரு ஊர்ல (சத்தியமா பாட்டிக் கதை இல்லை.)ஒரு பழ வியாபாரி இருந்தாராம்.அவர் வாழ்க்கையில முன்னேற எத்தனையோ முயற்சிகள் எடுத்தாலும் கஸ்டமாவே இருந்திச்சாம்.அவரோட மனைவி திட்டிக்கொண்டே இருந்தாவம்.மூன்று பிள்ளைகளும் இருந்திச்சினமாம்.அப்போ ஒரு நாள் தன்ர மூத்த மகனோட தன்ர கவலையை சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தாராம்.அப்ப அவரின்ர மகனுக்கு விளங்கிச்சாம்.

அப்பா பாவம்.அவர் சோர்ந்துபோகேல்ல.எவ்வளவு முயற்சி செய்றார்.ஆனாலும் எங்கட கஸ்டம் கஸ்டமாவே இருக்கு.அதற்காக அவரைச் சோரவிடக்கூடாது எண்டு நினைச்சு அவர்கூடையில இருந்து ஒரு பழத்தைப் பிச்சுக்காட்டி "அப்பா...பாருங்கோ இந்தப் பழத்துக்குள்ள இவ்வளவு விதைகள் இருக்கு.ஆனால் முளைக்கப் போட்டால் எல்லாம் முளைக்குமோ இல்லைத்தானே அதுபோல நாம் முயற்சிக்கிற எல்லாமே வெற்றியாகும் எண்டு நினைக்கிறது சரில்ல.நங்கள் விதைச்சுக்கொண்டேயிருப்போம்.ஏதோ ஒருநாள் நிச்சயமா ஒரு விதை முளைச்சு விருட்சமா ஆகும்.அப்பா கவலைப் படாதேங்கோ.இனி முயற்சிக்கு நானும் கூட உழைப்பேன்"எண்டு சொல்லிச் சமாதானம் சொல்லி ஊக்கப்படுத்தினானாம்.

கதையும் முடிஞ்சுது.காக்காவும் நித்திரையாப் போய்ட்டுது.....!





Thursday, June 23, 2011

படித்ததில் பிடித்தது - நீங்கள் பணக்காரர் ஆகிட ஒரு சுலபமான வழிபாடு

நீங்கள் பணக்காரர் ஆகிட ஒரு சுலபமான வழிபாடு




பெரும் செல்வ வளம் தரும் திருப்பதி வழிபாடு

உங்களுடைய பிறந்த ஜாதகத்தில் எப்பேர்ப்பட்ட தோஷங்கள்,அவ யோகங்கள் இருந்தாலும் அவைகள் அடியோடு நீங்கி பெரும் செல்வச் செழிப்போடு வாழ ஒரு சுலப வழிபாடு இருக்கிறது.

நீங்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் திருப்பதி வெங்கடாஜலபதிகோவிலுக்குச் செல்லவேண்டும்.சென்று அங்கு சுப்ரபாத தரிசனம் செய்ய வேண்டும்.இப்படி 48 சனிக்கிழமைகள் (11 மாதங்கள்) சுப்ரபாத தரிசனம் செய்தால்,பெரும் செல்வ வளத்தின் அதிபதியாகிவிடுவீர்கள்.

இந்த சனிக்கிழமை சுப்ரபாத தரிசனத்தை ஒரு தவமாக,ஒரு யாகமாக,ஒரு லட்சியமாகச் செய்ய வேண்டும்.எப்பேர்ப்பட்ட இடர்ப்பாடுகள் வந்தாலும்,48 சனிக்கிழமைகள் தொடர்ந்து செய்யும் வரை விடாமல் செய்ய வேண்டும்.

அப்படி திருப்பதிக்கே செல்ல இயலாத,ஆனால் வறுமையிலிருந்து அடியோடு நீங்கி நிம்மதியாகவும்,செல்வச் செழிப்போடும் வாழ விரும்புவோர் ஏராளமானவர்கள் இருக்கின்றனர்.அவர்கள்,தமது வீட்டிலேயே ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 5 மணிக்குள் எழுந்து குளித்து தயாராகிவிடவேண்டும்.5மணிக்கு திருப்பதி வெங்கடாஜபதி படத்திற்கு மாலை அணிவித்து சுப்ரபாத கேசட்டை ஒலிக்கச் செய்ய வேண்டும்.சுப்ரபாத கேசட் ஒலித்து முடியும் வரை திருப்பதி வெங்கடாஜலபதியின் படத்தின் முன்பாக தியானத்தில் அமர்ந்து மனப்பூர்வமாக நமது தேவை என்ன என்பதை வேண்ட வேண்டும்.சுப்ரபாதம் முடிந்ததும்,திருப்பதி வெங்கடாஜபதிக்கு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.

அதன்பிறகு,வீட்டுக்கு அருகில் இருக்கும் பசுவுக்கு இரண்டு வாழைப்பழங்கள் கொடுக்க வேண்டும்;வாழைப்பழங்கள் கொடுத்தப்பின்பே,காலை உணவு அருந்த வேண்டும்.இப்படி 48 சனிக்கிழமைகள் செய்தால்,செல்வ வளம்மிக்கவர்களாக மாறுவது உறுதி!
நன்றி:பி.எஸ்.பி.யின் விடியல் பக்கம்3,மார்ச் 2008.

Wednesday, June 15, 2011

படித்ததில் பிடித்தது - தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?

தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?


உண்மைச் சம்பவங்கள்
சம்பவம் 1 :
எனது நண்பரின் நண்பர் ஒருவர் திருப்பூரில் Textile Industry நடத்தி வருகிறார். நல்ல வருமானம், கார், பங்களா, வாழ்க்கை இப்படி இருந்தபொழுது சோதனை, தோல்வி, தோல்வி, தோல்வி.
கடைசியில் வெறும் ஆளாக நின்றார். பங்களா பறிபோனது, கார்கள் போய்விட்டன. கடைசியில் தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர வேண்டிய நிலைமையாகிவிட்டது. உலகமே சிரித்தது. உலகம் மதிக்கவில்லை. ஆனால் இவர் கலங்கவில்லை. ‘இப்பொழுது என்னிடம் ஒன்றும் இல்லை. ஆனால், எதிர்காலத்திலும் ஒன்றுமில்லை என்று பொருளில்லை. நான் இப்போதைக்கு இந்த வேலையைச் சரியாகச் செய்வேன்” என்று தீவிரமாக அந்தக் கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தார்.
இருந்தாலும் “வாழ்க்கை முழுவதும் இப்படியே இருக்கமாட்டேன். மீண்டும் வாழ்க்கையில் ஜெயிப்பேன்” என்றதீவிர எண்ணங்களை மனதில் வளர்த்துக் கொண்டிருந்தார்.
இப்படியிருந்த போது Purchase Department-ல் பொருட்களை வாங்கும் பகுதியில் இவருடைய பொறுப்பு. இதில் பல இடங்களுக்குச் சென்று பல பொருட்களை வாங்க வேண்டும்.
இப்படி செய்து வந்த பொழுது ஒரு முக்கியமான அம்சத்தை இவர் கவனித்தார். ஒரு குறிப்பிட்ட பொருள் மிக அதிக விலைக்கு விற்பதை கண்டுள்ளார். அதற்கு அதிக போட்டியும் இல்லை. ஆனால் உண்மையில் அதன் உற்பத்திச் செலவு மிக மிகக் குறைவு. ஆனால் விற்பனை விலையோ மிக அதிகமாக இருந்தது. இவருடைய எண்ணத்தில் “ஏன் இந்தப் பொருளை நாம் தயாரிக்கக் கூடாது” இந்த எண்ணம் மனதிற்கு வர வர அதைப் பற்றிய விபரங்களை எல்லாம் சேகரித்து வைத்தார்.
கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேகரித்து ஒரு வாடகைக் கட்டிடத்தில் தனது தொழிலை ஆரம்பித்தார். ஏற்கனவே வேலையில் இருந்த போது நிறையத் தொடர்புகள் இருந்தது. நிறைய order இவருக்குக் கிடைத்தது. படிப்படியாக வளர்ந்து மீண்டும் ஒரு பெரிய தொழிலதிபர் ஆனார்.
அவர் என்னுடைய பயிற்சியில் ஈரோட்டில் கலந்து கொண்டபோது சொன்னார். “என்னுடைய முதலாளியுடன் விலை உயர்ந்த காரில் கம்பெனி கூட்டத்திற்காக சென்று கொண்டிருந்தேன். இதேபோல் விலையுயர்ந்த காரை மீண்டும் வாங்குவேன் என்று முடிவெடுத்தேன். இன்று உங்கள் பயிற்சிக்கு அந்தப் புதிய காரில் தான் வந்திருக்கிறேன்” என்று சொன்னார். இது உண்மைச் சம்பவம்.
மீண்டும் உலகம் பாராட்டியது. நண்பர்களே! இவர் அடைந்தது தோல்வி; அடைந்தது வீழ்ச்சி. ஆனால், மனத்தை அத்துடன் நிறுத்திவிடவில்லை. மீண்டும் ஜெயிப்பேன் என்றஉணர்வு அவரை மீண்டும் ஜெயிக்க வைத்தது.
தொழிலில் எத்தகைய தடங்கல் வந்தாலும், சோதனை வந்தாலும் அதையும் வாய்ப்புகளாகப் பயன்படுத்தும் எண்ணம் இருந்தால் வெற்றி நிச்சயம். இதன் பெயர் Positive Thinking அதாவது உடன்பாட்டு எண்ணம் வேண்டும். அதேபோல என்ன சிக்கல், தடங்கல் வந்தாலும் அதிலும் ஏதேனும் செய்ய முடியும் என்றநேர்மறையான எண்ணம் வேண்டும். இந்த மனநிலை இருந்தால் எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் வெல்வார்கள்.
சம்பவம் 2 :
ஒரு அமெரிக்க ஆசிரியப் பெண்மணி வாழ்க்கையில் நிகழ்ந்தது. தன்னுடைய வாழ்வின் நோக்கத்தை பெரிய கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று வைத்திருந்தார். பலர் அவரை கேலி செய்து கொண்டு இருந்தார்கள். ‘நீயோ ஆசிரியர், நீ எப்படி அவ்வளவுப் பணத்தை சம்பாதிக்க முடியும்’ என்று.
ஆனால், அவர்களைப் பொறுத்த அளவில் தன்னுடைய இலட்சியத்தில் தெளிவாக இருந்தார்.
இப்படி வாழ்ந்து கொண்டிருந்தபோது, ஒருமுறை ஒரு விபத்து ஏற்பட்டு ‘வீல்சேரி’ல் அமர வேண்டிய நிலைமையாகி விட்டது. அதாவது வீல்சேரில்தான் போகமுடியும், வரமுடியும். முழுமையாக பாதிப்பு. எல்லோரும் சொன்னார்கள் ‘இனி வாழ்க்கை முடிந்து விட்டது’ என்று. ஆனால், அந்தப் பெண்மணி ‘என் உடல்தான் முடங்கிவிட்டது. உள்ளம் முடங்கவில்லை. நிச்சயம் இந்த வாழ்க்கையில் என்னுடைய இலட்சியத்தை அடைந்தே தீருவேன்’ என்று தீர்க்கமாக இருந்தார்கள்.
இப்படி இருந்து கொண்டிருந்தபோது, இவர்களுக்குள் ஒரு சிந்தனை இந்த ‘வீல்சேர்’ வசதியாக இல்லை. நல்ல வசதியான ஒரு வீல்சேரை நாம் ஏன் தயாரிக்கக் கூடாது என்றஎண்ணம் ஓடியது. இதையே ஒவ்வொரு நாளும் சிந்தனை செய்து அந்தச் சேரில் என்னென்ன மாற்றங்கள் செய்ய முடியுமோ செய்து கடைசியில் ஒரு அற்புதமான வீல்சேரை உருவாக்கினார். அந்த ‘வீல் சேரை’ இரண்டு மூன்று வகைகளில் தயாரித்து மக்களிடம் சோதனைக்கு அனுப்பும்போது, இது மிக அற்புதமாக இருக்கிறது என்று படிப்படியாக ஆர்டர் வந்தது. இதை அவர்கள் ஒரு ஒர்க்ஷாப்பில் தயாரிக்க கொடுக்க ஆரம்பித்து, படிப்படியாக வளர்ந்து அந்த ‘வீல்சேர்’ மூலமே ஒரு பெரிய கோடீஸ்வரர் ஆகிவிட்டார்.
இதுவரை வீல்சேர் தயாரித்தவர்கள் நல்ல நிலைமையில் இருந்தவர்கள். அவர்கள் தயாரித்த ‘வீல்சேர்’ அவ்வளவு வசதியாக இல்லை. ஆனால், அந்த வலியும், வேதனையும் உடைய இந்தப் பெண் தயாரித்ததால் அது மிகச் சிறந்ததாக – பொருத்தமானதாக இருந்தது.
சாதாரண மனிதர்கள் விபத்தானவுடன் முடங்கியிருப்பார்கள். ஆனால் விபத்தையே -பிரச்சனையையே ஓர் வாய்ப்பாகச் சாதனை யாளர்கள் பயன்படுத்துகின்றனர்.

“பாதைகளை வழிமுறைகளை மாற்றுவேன். ஆனால், இலட்சியத்தை மாற்றமாட்டேன். அடைந்தே தீருவேன்” என்றதீவிர எண்ணம், அசைக்க முடியாத ஸ்திரமான எண்ணம் கொண்டு விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயலாற்றினால் வெற்றி நிச்சயம்!


பயிற்சிகள்


1. அழிக்கும் பயிற்சி (Erasian Technique)
தோல்விகள் நிகழ்ந்த பின்பு மனம் டென்ஷன், கோபம், கவலை உணர்வுகளால் அழுத்தப்படலாம். அதை நீக்க, உள்ளிருக்கும் உணர்வுகளை உங்கள் மேல் அன்பு, அக்கறை கொண்ட மனிதரிடம் முழுமையாகச் சொல்லி, இறக்கி வையுங்கள்.
அப்படி இல்லாவிட்டால் ஒரு பேப்பரை எடுங்கள். மனத்தில் உள்ள அத்தனை விஷயங் களையும் எழுதுங்கள். எதையும் விடாமல் என்னென்ன தோன்றுகிறதோ எல்லாவற்றையும் எழுதுங்கள். பின் அந்தப் பேப்பரைக் கிழித்துப் போட்டுவிடுங்கள். சுமை குறையும். ஒரு முறையில் தீராவிட்டால் மீண்டும் செய்யுங்கள்.


2. தூண்டும் பயிற்சி (Triggering Technique)
பொதுவாக தோல்வி ஏற்பட்டதற்குப் பிறகும் அந்த நினைவுகள் மனதுக்கு வந்து வந்து வேதனையைக் கொடுக்கும்.
நிகழ்ந்த சம்பங்களை அலசி ஆராயுங்கள். நிச்சயமாக அதில் ஏதேனும் ஓர்பாடத்தை இணைத்து விடுங்கள்.
எப்பொழுதெல்லாம் அந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறதோ படிப்பினை – பாடம் – இருக்கும்.
சம்பவம் நினைவுக்கு வரும்பொழுது அதனுடன் கற்றஅப்பொழுதெல்லாம் அந்தப் பாடம் – செய்தி நினைவுக்கு வரும்.
‘கற்றபாடத்தைப் பயன்படுத்தி மீண்டும் முயற்சி செய்து வெல்வேன்’ என்று உறுதியெடுத்துக் கொள்ளுங்கள்.
இவ்வளவு நாள் தோல்விகள் நினைவுக்கு வந்து உங்களை கீழே இழுத்துக் கொண்டு சென்றிருக்கும்.
ஆனால் இனிமேல் அந்த நினைவுடன் அதனால் கற்ற பாடம் நினைவிற்கு வந்து, அந்தச் சம்பவம், படிப்பினையைக் கொடுத்து உங்கள் உயர்வுக்குத் துணை செய்யும்.


3. மாற்றும் பயிற்சி (Conversion Technique)
இது, தோல்வியைச் சவாலாக மாற்றும் பயிற்சி. தோல்வி நினைவுகள் வரும்பொழுது உங்களுக்குள்ளே நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள்.
“என்னிடம் அளவு கடந்த அறிவு, திறமை, ஆற்றல், சக்தி இருக்கிறது. அதைச் சிறிதளவு பயன்படுத்தியதால்தான் தோல்வி. என்னிடம் மறைந்துள்ள மாபெரும் ஆற்றலை – வெளிக் கொணர்ந்து தொடர்ந்து செயல்புரிவேன், வெற்றி அடைவேன். அது என்னால் முடியும்! இது என் திறமைக்கு – என் வாழ்க்கைக்கு ஓர் சவால். நான் விசுவரூபம் எடுப்பேன். வெல்வேன்! என்னால் முடியும்!” என்று முழு மனத்துடன் கைகளை உறுதியாக வைத்து, விரல்களை மடித்து வீரத்துடன் சொல்லுங்கள். உள்ளுக்குள்ளே பெரும் சக்தி விசுவரூபம் எடுப்பதாய்க் கற்பனை செய்யுங்கள். தொடர்ந்து போராட உறுதி கொள்ளுங்கள். எழுந்து நில்லுங்கள்.
தோல்வி நினைவுகள் வரும்பொழுது – அதனோடு மூழ்கி விடாமல் – எழுச்சி கொண்டு செயல்படத் தயாராகுங்கள். தோல்விச் சம்பவங்கள் உங்களை மீண்டும் மீண்டும் விடாமல் போராடத் தூண்டட்டும்.
அவ்வாறு மாற்றி விட்டால் – வாழ்க்கை முழுவதும் வெற்றி – வெற்றி – வெற்றிதான்.


4. வெற்றி மனக்காட்சிப் பயிற்சி

(Creative Visualisation & Success Goal Imagery)

காலையிலும் மாலையிலும் அமைதியான ஓர் அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். கண் களை மூடிக்கொள்ளுங்கள். மூன்று முறைமூச்சை நன்கு இழுத்து – நிதானமாக வெளியிடுங்கள். பின் எதை அடைய நினைக்கிறீர்களோ – அதை அடைந்து விட்டால் – வெற்றி பெற்றதற்குப் பிறகு எப்படி இருக்கும் என்றநிறைவுக் காட்சியைத் தெளிவாக மனக்கண்ணால் பாருங்கள். பிரச்சனை இருந்தால் அல்லது தீர்ந்து விட்டால் எப்படி இருக்கும் என்ற நிலையைக் காட்சியாக மனதில் பாருங்கள். பிறகு மெதுவாகக் கண்களைத் திறந்து கொள்ளுங்கள்.
இதுபோன்ற வெற்றிக் காட்சியை அடிக்கடி மனத்தில் பார்த்து வாருங்கள். இது உள் மனதில் பதிந்து அவ்வாறேநடக்கும்.
வெற்றிக் காட்சிகளையும், உடன்பாட்டு எண்ணங்களையும் மனத்தில் அடிக்கடி எண்ணாமல் விட்டுவிட்டால் தோல்விக் காட்சி களும், தோல்வியால் ஏற்பட்ட பின்விளைவு களும் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்து உங்களைக் கவலையடைய வைத்துச் செயல் பாட்டைத் தடுக்கும். சிந்தனையைக் குழப்பும்.
ஆகவே உடன்பாட்டு எண்ணங்களை நிரப்புங்கள். வெற்றி அடையுங்கள்.


5.உறுதிமொழிப் பயிற்சி (Charging Technique)



மனதுக்குள் கீழ்க்கண்டவாறு சொல்லிக் கொண்டே இருங்கள்.
நான் தன்னம்பிக்கை உள்ளவன்!
நான் சக்தி மிக்கவன்!
நான் சாதனையாளன்!
நான் அன்பு மிக்கவன்!
நான் உற்சாகமானவன்!
நான் சுறுசுறுப்பானவன்!
நான் மகிழ்ச்சி நிறைந்தவன்!
என்னால் முடியும்!
முடியும்! முடியும்!
வெற்றி நிச்சயம்!

Monday, June 13, 2011

படித்ததில் பிடித்தது - மறதி

மகிழ்ச்சியுடன் மனிதன் வாழ வேண்டும் என்பதற்காகவே, மறதியை நமக்கு வரமாக அளித்திருக்கிறது இயற்கை.
நமது மகிழ்ச்சிக்கு மாபெரும் தடையாக இருப்பது நமது கடந்த காலம் பற்றிய சிந்தனைகளே!




நமது மகிழ்ச்சிக்கு மாபெரும் தடையாக இருப்பது நமது கடந்த காலம் பற்றிய சிந்தனைகளே!


அவற்றை மூட்டையாகக் கட்டி நம் மேல் ஏற்றிக் கொண்டு, இறக்கி வைக்கமுடியாமல் இம்சைக்கு உள்ளாகிறோம்.


நண்பர் ஒருவர் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும்போதுகூட, 'நேற்று இவர் நம்மிடம் எரிச்சலுடன் நடந்துகொண்டாரே?' என்ற கடந்த கால நினைவு, கதவைத் திறந்துகொண்டு உள்ளே வருகிறது. அவரோடு நம்மால் சகஜமாகப் பழகமுடிவதில்லை. செயற்கையான பிளாஸ்டிக் புன்னகையுடன் மனிதர்கள் வாழ ஆரம்பித்தால், வாழ்க்கை வறண்டு விடும்.


மகிழ்ச்சியுடன் மனிதன் வாழ வேண்டும் என்பதற்காகவே, மறதியை நமக்கு வரமாக அளித்திருக்கிறது இயற்கை.


ஆனால், நினைவாற்றலை மேம்படுத்தும் முயற்சிகளில் அந்த வரத்தைத் தொலைத்துவிட்டு, தேவையானவற்றை வழியவிட்டு, தகுதியற்றவற்றைத் தக்கவைத்துக் கொள்கிறோம்.


விலங்குகள் எப்போதும் மகிழ்ச்சியுடன் விளையாட காரணம், அவை நிகழ்காலத்தில் மட்டுமே நீடித்திருக்கின்றன. நாம் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் ஏற்படுத்திக்கொள்கிற இணக்கமே, நமது மகிழ்ச்சியை மெருகேற்றுகிறது.


வன்மம் நிறைந்த மனத்துடன் இருப்பவர்கள், மாநகராட்சி குப்பைகளைக் கொட்டும் இடத்தில் இருப்பதைப் போன்ற மனநிலையுடன் இருப்பார்கள்.
சூழலைச் சுகந்தமாக்குபவர்களால் மட்டுமே வாழ்க்கையை வசந்தமாக்கிக் கொள்ளமுடியும். 'நேற்று நம்மிடம் கோபப்பட்ட மனிதன் வேறு;


அவனிடம் வருத்தத்தை வரவு வைத்த மனிதன் வேறு' என்கிற புரிதல் வந்தால், மகிழ்ச்சி மட்டுப்படுவ தில்லை. வருத்தம் வரும்போதெல்லாம்,


உடனே அதை வடிகாலாக்குகிற வாழ்க்கை முறை முன்பு இருந்தது. குடும்பம் அதற்கு வழிவகுத்தது. யாரிடமாவது பகிர்ந்துகொண்டால், நமது சோகங்கள் பஸ்பமாகிவிடும் அனுசரணை இருந்தது.


ஆனால், இன்றைய பரபரப்பான வாழ்வில் பகிர்தல் குறைவு. 'உனது சோகம் உன்னுடன்! என்னுடையதை நான் பார்த்துக்கொள்கிறேன்' என்பதே இன்றைக்கு உறவுகளுக்குள் இருக்கும் மேம்போக்கான, மிக மெல்லிய உறவு இழைகள்.



எப்போது வேண்டுமானாலும் இற்றுப் போகிற நிலையில் ஊசலாடும் உறவுகளில், உண்மை ஊஞ்சலாட மறுக்கிறது.
இன்றைக்கு எல்லாக் கதவுகளும் சாத்தப்பட்டே இருக்கின்றன.


நமது உலகே சுருங்கிப்போன சூழலில், கடந்த காலத்தை ஊதி ஊதிப் பெரிதாக்கி, இறக்கி வைக்க முடியாமல் தவிக்கின்ற மனநிலையில், ஆனந்தக் குழந்தைகள் ஓடிவரும்போது, அவற்றை அள்ளி எடுத்து அரவணைக்க முடியவில்லை.

நான் படித்த ஒரு சம்பவம்:



அரண்மனையையட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான். நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.


திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்... அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது. இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.


வாயிற்காவலனிடம், ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், ''என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?'' என்றார் அரசர். ''ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்துகொண்டு விருந் துக்கு வருவேன்'' என்றான் மிகவும் பவ்வியமாக.


அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக்கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்!
அப்போது மன்னர் அவனிடம், ''விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய். அதைவிட, முக்கியமான ஒன்று... இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது. உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது'' என்றார். கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன்,


மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான். அவனது மனம் சற்றே சலனப்பட்டது. 'ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்துவிட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!' என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக்கொண்டான்.


வீடு வாசல் இல்லாத அவனால், பழைய துணி களை எங்கேயும் வைக்கமுடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை. அடிக்கடி கீழே விழுந்துவிடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை.
அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.


அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது. மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர். அவனைக் 'கந்தல் பொதி கிழவன்' என்றே அழைத்தனர். இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார். அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.


ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது. பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது.


அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியரு மூட்டை இருக்கிறது.


அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம். நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்துவிடுகிறது.
அரண்மனைகளில்கூட, இன்றும் பலர் பிச்சைக்காரர் களாகவே வாழ்கின்றனர். அனாதை ஆஸ்ரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு.


மனதில் இருக்கிறது மகிழ்ச்சி. வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது. நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை.


நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன.


அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறிய மனமில்லை. வீடையே குடோனுக்கு இணையாக மாற்றிக் குடித்தனம் நடத்துபவர்களும் இருக்கின்றனர்.


இல்லத்தை மட்டுமல்ல, உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால், அவற்றின் அழுகல் நாற்றம் உதடுகளின் வழியே சொற்களாகவும் கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையையே விநியோகிக்கும்; வெளிச்சத்தை வழங்காது.


மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை.


மகிழ்ச்சியாக இருப்போம்;


அப்போது காரணங்கள், தாமாகத் தோன்றி தோரணங்களாகித் துணை


நஇற்கும்


அன்புடன் - அன்பன் - கோவிந்த்


http://geo.yahoo.com/serv?s=

Tuesday, June 7, 2011

மலேசியா இந்த சங்க தேவார போட்டி பாடல்கள் பிரிவு ௩


3/2

பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த


நாவேறு

செல்வியும் நாரணனும் நான்மறையும்


பூவேறு

கோனும் புரந்தரனும் பொற்பமைந்த


நாவேறு

செல்வியும் நாரணனும் நான்மறையும்


மாவேறு

சோதியும்

..........................


மாவேறு

சோதியும் வானவரும் தாமறியா


சேவேறு

சேவடிக்கே சென்றூதாய் கொதும்பி


மாவேறு

சோதியும் வானவரும் தாமறியா


சேவேறு

சேவடிக்கே சென்றூதாய் கொதும்பி


பூவேறு

கோனும் புரந்தரனும் பொற்பமைந்த


நாவேறு

செல்வியும் நாரணனும் நான்மறையும்


மாவேறு

சோதியும் வானவரும் தாமறியா


சேவேறு

சேவடிக்கே சென்றூதாய் கொதும்பி.........இஇ

.................


Pooveru konum purantharanum potpamaintha
Naaveru selviyum narananum naan maraiyum
Pooveru konum purantharanum potpamaintha
Naaveru selviyum narananum naan maraiyum


Maaveru sothiyum............
Maaveru sothiyum vaanavarum thaamariyaa
Severu sevadikke sendroothaai kothumbi
Maaveru sothiyum vaanavarum thaamariyaa
Severu sevadikke sendroothaai kothumbi


Pooveru konum purantharanum potpamaintha
Naaveru selviyum narananum naan maraiyum
Maaveru sothiyum vaanavarum thaamariyaa
Severu sevadikke sendroothaai kothumbi e.....ee........


3/3


அருளும்

அரசனும் ஆணையுந்த் தேறும்

x2


பொருளும்

பிறர் கொள்ள போவதன் முன்னந்


அருளும்

அரசனும் ஆணையுந்த் தேறும்

x2


பொருளும்

பிறர் கொள்ள போவதன் முன்னந்


தெருளும்

உயிரோடு செல்வனைச் சேரில்

x2


மருளும்

பிணை அவன் மாதவமைன்றே


மருளும்

பிணை அவன் மாதவமைன்றே


தெருளும்

உயிரோடு செல்வனைச் சேரில்


மருளும்

பிணை அவன் மாதவமைன்றே... ...ஏஏ

................


 


Arulum arasanum aanaiyunth therum x2
porulum pirar kolla povathan munnanth


Arulum arasanum aanaiyunth therum x2
porulum pirar kolla povathan munnanth


therulum uyirodu selvanaich cheril x2
marulum pinai avan maathavamandre x2


therulum uyirodu selvanaich cheril
marulum pinai avan maathavamandre ...ae ...aeaeae.....


3/4


அளவிலாத

/ பெருமையா ராகிய


அளவிலா

அடியார் புகழ் கூருகேன்


அளவிலா

... பெருமையாகிய


அளவிலா

அடியார் புகழ் கூருகேன்


அளவு

கூட உறைபரி தாயினும்


அளவு

கூட உறைபரி....... தாயினும்


அளவில்

ஆசை துரப்ப அரைகுவேன்


அளவில்

ஆசை துரப்ப அரைகுவேன் ஏஏ ....ஏஏஏ

............


 


Alavillaatha / prumaiyaa raagiya
alavilaa adiyaar pugazh koorugen


Alavillaa....tha / prumaiyaa raagiya
alavilaa adiyaar pugazh koorugen


alavu kooda uraipari thaayinum
alavu kooda uraipari........ thaayinum


Alavil aasai thurappa araiguven
Alavil aasai thurappa araiguven ... aeae....aeaeae.....

மலேசியா இந்து சங்க தேவார போட்டி பாடல்கள் பிரிவு 3

3/1
சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன் நாமம் என்நாவில் மறந்தறியேன்
உன் நாமம் என்நாவில் மறந்தறியேன்
உலந்தார் தலையில் பலி கொண்டுழல்வாய்
உலந்தார் தலையில் பலி கொண்டுழல்வாய்
உடல்லுல்ளொரு சூலை தவிர்த்தருளாய்
உடல்லுல்ளொரு சூலை தவிர்த்தருளாய்
அளந்தேன் / அடியேன் / அதிகை கெடில
அளந்தேன் / அடியேன் / அதிகை கெடில
வீரட்டான துறை அம்மானே
வீரட்டான துறை அம்மானே....ஏ...ஏ ஏ ஏ .........

Monday, June 6, 2011