Thursday, August 11, 2011

அம்மா என்றழைப்போமே.....


AMMA ENDRAZHAIPPOME!



Karuvil irunthu naan veli vanthaal kasta paduven endru..


Tharunam paarthu thaai thanathil paalai adaithavale!


Ammaa.... Ammaa... Ammaaa.... Ammmmaaaaa



Ammaa... aah... aah... endrazhaippome


Ammaaa... aaaa... endrazhaippome


Aanantham adainthaalum veene thunbam ingge kandaalum x2 (Ammaa)



Vaanil uzhavum nilavai / kaatti vaayil oottinaale....ae.ae.. x4 - Aval


Maayai / ennum azhagai kaatti ulagil virattinaale...ae..... - Ennai


Maayai / ennum azhagai kaatti ulagil virattinaale... - Avalai (Ammaa)



Thathi / tavzalnthu tarayil / vizhunthu taanaai nadanthome...ae..ae.. x4 - Pattu


Suruthi kettu / pirinthu mudivil arinthome....ae.... - Ulagil pattu


Suruthi kettu / pirinthu mudivil arinthome. - Avalai .... (Ammaa)



Naam Azhaippome... Indrazhaippome....inggazhaippome..... Ammaaa.....aaa....



Karu Maari Ammanin Karunai Mugam...


Arul Vaari Vazhanggum... Theiva Mugam....



அம்மா என்றழைப்போமே

அம்மா என்று அழைப்போமே

கருவில் இருந்து நான் வெளி வந்தால் கஷ்ட படுவேன் என்று

தருணம் பார்த்து தாய் தனத்தில் பாலை அடைத்தவளே!

அம்மா அம்மா அம்மா .... அம்மா........


அம்மா ஆஆ என்றழைப்போமே ...

அம்மா ...ஆ.........என்றழைப்போமே

ஆனந்தம் அடைந்தாலும் வீணே துன்பம் இங்கே கண்டாலும் x2 (அம்மா)


வானில் உலவும் நிலவை / காட்டி வாயில் ஊட்டினாலே ...எ.எ. x4.... - அவள்

மாயை / என்னும் அழகை காட்டி உலகில் விரட்டினாலே...எ .... - என்னை

மாயை / என்னும் அழகை காட்டி உலகில் விரட்டினாலே - அவளை - (அம்மா)


தத்தி / தவழ்ந்து தரையில் / விழுந்து தானாய் நடந்தோமே....எ.எ. x4 - பட்டு

சுருதி கேட்டு / பிரிந்து முடிவில் அறிந்தோமே....எ......- உலகில் பட்டு

சுருதி கேட்டு / பிரிந்து முடிவில் அறிந்தோமே - அவளை - (அம்மா)

நாம் அழைப்போமே..... இன்று அழைப்போமே ..... இங்கு அழைப்போமே ..... அம்மா.....


Friday, August 5, 2011

ராகு கால துர்க்கை அஸ்தமம்

ராகு கால துர்க்கை அஸ்தமம்
வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்கு மானவள்

வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்

தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்

தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


உலகைஈன்றவள் துர்க்கா உமையுமானவள்

உண்மையானவள் எந்தன் உயிரை காப்பவள்

நிலவில் நின்றவள் துர்க்கா நித்யை யானவள்

நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே


தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


செம்மையானவள் துர்கா செபமு மானவள்

அம்மையானவள் அன்புத் தந்தையானவள்

இம்மையானவள் துர்க்கா இன்ப மானவள்

மும்மையானவள் என்றும் முழுமை துர்கையே


தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


உயிரு மானவள் துர்க்கா உடலுமானவள்

உலக மானவள் எந்தன் உடமை யானவள்

பயிறு மானவள் துர்கா படரும் கொம்பவள்

பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்கையே


தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


துன்ப மற்றவள் துர்கா துரிய வாழ்பவள்

துறையு மானவள் இன்பத் தோணி யானவள்

அன்பு உற்றவள் துர்க்கா அபாய வீடவள்

நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்கையே


தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


குருவு மானவள் துர்கா குழந்தை யானவள்

குளமு மானவள் எங்கள் குடும்ப தீபமே

திருவு மானவள் துர்க்கா திறுசூலி மாயவள்

திரு நீற்றில் என்னிடம் திகழும் துர்கையே


தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்

ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்

ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன்

ராகு துர்கையே! என்னை காக்கும் துர்கையே


தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


கன்னி துர்கையே இதயக் கமல துர்கையே

கருணை துர்கையே வீரக் கனக துர்கையே

அன்னை துர்கையே என்றும் அருளும் துர்கையே

அன்பு துர்கையே என்றும் அருளும் துர்கையே


தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே