Wednesday, June 24, 2009



PADITHATHIL PIDITHATHU



போய் விட முடிவு செய்துவிட்டேன் ...

நல்ல நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கின்றன. மோசமான நாட்கள் அனுபவத்தைக் கொடுக்கின்றன. ஆனால் இரண்டும் வாழ்க்கைக்கு தேவையாக இருக்கின்றன.ஒரு நாள் நான் இந்த உலகத்தை விட்டு போய் விட முடிவு செய்தேன்.என் வேலையை விட்டு விட்டு், சொந்த பந்தங்களை விட்டுவிட்டு, உலகத்தை விட்டு போய் விட முடிவு செய்தேன்.


உலகத்தை விட்டு போவதற்குமுன், காட்டிற்கு சென்று கடவுளுடன் பேச நினைத்தேன்.


நான் : கடவுளே.... நான் இந்த உலகத்தை விட்டு செல்லப் போகின்றேன்..

கடவுள் : இல்லை அது மாதிரி செய்யக்கூடாது


நான் : ஏன் இந்த உலகத்தை விட்டு செல்லக்கூடாது என்று ஒரு நல்ல காரணத்தை கூறுங்களேன்.


கடவுள் : உன்னைச் சுற்றி உள்ள புற்களையும், மூங்கில்களையும் பார்.


நான் : ஆம்... மிக நன்றாக இருக்கின்றன.


கடவுள் : இந்த புற்களையும், மூங்கில்களையும் நான் விதைத்தேன்.அவைகளை நன்றாகப் பார்த்துக் கொண்டேன்.அவைகளுக்கு தேவையான காற்று, வெளிச்சம், தண்ணீர்அனைத்தையும் அளித்தேன்.முதல் வருடத்தில் புற்கள் மிக வேகமாக பூமியில் இருந்துவந்தன. பூமியை பச்சை நிறத்தால் மூழ்கடித்தன.மூங்கில் விதையில் இருந்து ஒன்றும் வரவில்லை.அதற்காக மூங்கிலை நான் கை விட்டு விடவில்லை.இரண்டாம் வருடத்தில் புற்கள் காடுகள் முழுவதுமாகப் மிகஅழகாகப் படர்ந்தன.மூங்கிலில் இருந்து ஒன்றும் வரவில்லை.அதற்காக நான் மூங்கிலை விட்டு விடவில்லை.மூன்றாம் வருடமும் நான்காம் வருடமும் மூங்கிலில் இருந்துஒன்றும் வரவில்லை.அதற்க்காக நான் அதை விட்டுவிடவில்லை.ஐந்தாம் வருடம், மூங்கிலில் இருந்து சிறிய முளை வந்தது.மற்ற செடிகளைப் பார்க்கும் போது, அது மிகச் சிறியதாக இருந்தது.ஆனால் 6 மாதத்தில், மூங்கில் 100 அடிக்கு மேல் வளர்ந்தது.மூங்கில் 5 வருடங்கள் செலவழித்தது, அதனுடைய வேர்களை பலப்படுத்ததான். அதனுடைய வேர்கள் அதனுடைய வாழ்வின் ஆதாரம். நான் எந்த ஜீவராசிக்கும் அதனுடைய சக்திக்கு மேல் தேவையான சவாலை நான் கொடுப்பதில்லை.--------------------------------------------------------------------------------------------
காரணங்களுக்காக படைக்கப் பட்டனவோ, அது மாதிரி ஓவ்வொரு உயிரும் ஒவ்வொரு காரணத்திற்காக படைக்கப் பட்டுள்ளன.உனக்கு ஒரு நேரம் வரும் கவலைப்படாதே....


நான் : எவ்வளவு உயரம் வரை நான் வளரமுடியும்?


...கடவுள் : எவ்வளவு உயரம் வேண்டுமானும் வளரமுடியும் .. வானமே எல்லை....நல்ல நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கின்றன.மோசமான நாட்கள் துக்கத்தைக் கொடுக்கின்றன.ஆனால் வாழ்க்கைக்கு இரண்டுமே தேவையாக இருக்கின்றன.ஒரு சந்தோஷமான வாழ்க்கை என்பற்கு இடையறா செயல்பாடும், ஆக்கத்திறனும் தேவையாக உள்ளது. அது தானாகவே நடப்பதில்லை. நமது விருப்பு, வெறுப்பு மற்றும் செய்கைகளாலும் அது நிர்ணயிக்கப் படுகின்றன. ஓவ்வொரு நாளும் நமக்கு புது புது சந்தோஷங்களும், நல்ல நேரங்களும் அவற்றை செய்வதற்காக கிடைக்கின்றன. அவற்றைப் பெற்றுக் கொண்டு நாம்தான் மேலே மேலே சென்று கொண்டு இருக்க வேண்டும்.சந்தோஷம் வாழ்வை இனிமையாக்குகின்றது.இன்னல்கள் வாழ்வை வலிமையாக்குகின்றது.துன்பங்கள் வாழ்வை மனித நேயம் மிக்கவராக ஆக்குகி்றது.தோல்விகள் வாழ்விற்கு பணிவைக் கொடுக்குகின்றன.வெற்றிகள் வாழ்க்கைக்கு ஓளியைத்தருகின்றன.ஆனால் நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நடத்துகின்றன.நம்பிக்கையை என்றுமே இழக்காதீர்கள்.


submit_url = "
http://raghavannigeria.blogspot.com/2009/03/blog-post_09.html"


VISIT www.g1g4lite.net (guest code 71184) for your financial health

No comments:

Post a Comment